உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுபவமிக்க ஆசிரியர்களால் மேம்படும் மாணவர் கற்றல் திறன்

அனுபவமிக்க ஆசிரியர்களால் மேம்படும் மாணவர் கற்றல் திறன்

அ க் ஷரா அகாடமி பள்ளியில், குழந்தைகளுக்கு இயற்கை சூழலோடு இணைந்த மகிழ்வான கற்றல் வழங்கப்படுகிறது. 2024-25ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவ்வாண்டு அக் ஷரா அகாடமி பள்ளி, சி.பி.எஸ்.இ. ஒப்புதல் பெற்று, 12ம் வகுப்பிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களின் சிந்தனைத் திறன் மேலோங்க, ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் மாணவர்களின் மனநலனையும், உடல் நலனையும் கருதி, நாள்தோறும் விளையாட்டுத் துறை ஆசிரியர்களால் விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளின் வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆசிய அளவில் மாணவர்கள் சாதனைகள் புரிந்து வருகின்றனர். கற்றலோடு மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியும் ஆசிரியர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை