உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் பணி நியமனம்

முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் பணி நியமனம்

கோவை; நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு நாள் நிகழ்வில் முன்னணி நிறுவனங்களிடமிருந்து, மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.ஐ.சி.டி, அகாடமியின் இணை துணைத் தலைவர் ராகவஸ்ரீனிவாசன், அண்ணா பல்கலை கோவை பிராந்திய வளாகத்தின் டீன் சரவணகுமார் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.தொழில் துறைகளின் நவீன வளர்ச்சி, வாய்ப்புகள் குறித்து விளக்கிய விருந்தினர்கள், மாணவர்கள் தங்கள் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.விழாவில், 475 மாணவர்களுக்கு மொத்தம் 823 வேலைவாய்ப்புக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், இரண்டு நிறுவனங்களில் கடிதங்களை பெற்றிருந்தனர். இவர்களில், 54 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் மற்றும் அதற்கு மேலும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் ஆண்டுக்கு, ரூ.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியின் செயலாளர் நீலராஜ், இயக்குனர் வினோத், முதல்வர் ஜெகதீசன், டீன் கல்வியாளர் பகீரதி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி பரத் சவுத்ரி மற்றும் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !