மாணவி பலாத்கார வழக்கு8 டாக்டர்கள் சாட்சியம்
கோவை, பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், நவ. 2 ம் தேதி இரவில் கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சதீஷ்,30, அவரது தம்பி கார்த்திக், 21, மதுரை குணா,20, ஆகியோரை காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். இவர்கள் மீது,கோவை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடக்கிறது. மாணவியை பரிசோதித்த 8 டாக்டர்கள் உட்பட 13 பேர் நேற்று சாட்சியம் அளித்தனர். 113 பேரில், இதுவரை 54 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.