பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளியில், 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை, தலைமை மாணவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடந்தது. மாணவ, மாணவியர், தங்களது ஓட்டுகளை பதிவு செய்து தலைமை மாணவர், துணைத் தலைவர்களைதேர்வு செய்தனர்.இவர்களுக்கான பதவியேற்பு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அரசுபெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ படைவீரர் ஹவில்தார் யுவராஜ் கலந்து கொண்டார்.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவர்கள், உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி தாளாளர் சுப்ரமணியம், நிர்வாகி தங்கமணி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். பள்ளி நிர்வாகி மகேஸ்வரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.