உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பலாத்கார வழக்கில் மாணவி சாட்சியம்

 பலாத்கார வழக்கில் மாணவி சாட்சியம்

கோவை: பாலியல் பலாத்கார வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்தாண்டு நவ. 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் கல்லுாரி மாணவி பேசிக்கொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். பீளமேடு போலீசார் விசாரித்து, சதீஷ்,30, கார்த்திக்,21, குணா,20, ஆகியோரை சுட்டு பிடித்தனர். கைதான மூவரும், கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். மூவர் மீது, கோவை மகளிர் கோர்ட்டில், 270 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நகல் வழங்கப்பட்டது. இவர்கள் மீது, கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி, காயப்படுத்தல், கூட்டு சதி, தடயங்கள் மறைத்தல் உள்ளிட்ட 15 பி.என்.எஸ். சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிபதி சுந்தர்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் ஆண் நண்பர் ஆஜராகினர். அதை தொடர்ந்து அரசு தரப்பு சாட்சி விசாரணை துவங்கியது. மாணவியின் ஆண் நண்பரிடம் சாட்சியம் பெறப்பட்டது. பிற்பகலுக்கு பிறகு, மாணவி சாட்சியம் அளித்தார். சுமார், 6 மணி நேரத்திற்கு மேல் இருவரும் சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை