உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டு மணி நேரம் ஒற்றை கம்பு சுற்றி அசத்திய மாணவி

இரண்டு மணி நேரம் ஒற்றை கம்பு சுற்றி அசத்திய மாணவி

கோவை,; சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளி மாணவி, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், ஒற்றை கம்பு சுற்றி அசத்தியுள்ளார்.கோவை, சரவணம்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், மாணவ, மாணவியர், 100 பேர் பங்கேற்றனர். போட்டியின் ஒரு பகுதியாக, இரண்டு மணி நேரம் கண்களை மூடிக்கொண்டு, உலக சாதனை புரிவதற்கான முயற்சியும் நடந்தது.சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 பயிலும் மாணவி மோகனப்பிரியா, துணியால் கண்களை கட்டிக்கொண்டு, இரண்டு மணி நேரம் ஒற்றை கம்பை சுற்றி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மாணவியை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி