மாணவர்கள் பாதிப்பு
அன்னுார்; மூக்கனுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியின் எதிர்புறம் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி தரம் பிரிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் கோவில் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. உடனடியாக இங்குள்ள குப்பையை அகற்ற வேண்டும், என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.