மேலும் செய்திகள்
அரவக்குறிச்சியில் கலைத் திருவிழா நிறைவு
14-Oct-2025
சூலுார்: சூலுார் வட்டார கலைத்திருவிழா, ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் மூன்று நாட்கள் நடந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தனி நடனம், குழு நடனம், நாட்டுப்புற பாடல்கள் பாடுதல், இசைக்கருவிகள் வாசித்தல், நாடகம், பேச்சு, பாட்டு, காவடியாட்டம், ஒயிலாட்டம், மணற் சிற்பம், ரங்கோலி உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரிய ஆசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவயருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
14-Oct-2025