உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வட்டு எறிதல் போட்டியில் வல்லவனான மாணவர்கள்

வட்டு எறிதல் போட்டியில் வல்லவனான மாணவர்கள்

கோவை; கோவை நேரு ஸ்டேடியத்தில், 'அ'-குறுமைய தடகள போட்டிகளை, தேவாங்க அரசு உதவிபெறும் பள்ளி நடத்தி வருகிறது. 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். இரண்டாம் நாளான நேற்று நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், 400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில், தனித்திறமையை மாணவர்கள் வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கான(14 வயதுக்குட்பட்ட) குண்டு எறிதல் போட்டியில், முகேஷ், சவுமியா தீபால், முகமது நவுபுல் ஆகியோரும், உயரம் தாண்டுதலில் அர்ஹனியா, பரணிதரன், முகமது அகீல் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வட்டு எறிதலில்(17 வயதுக்குட்பட்ட), ஆரிப் முகமது, ராஜூ, மாதேஸ் ஆகியோரும், 19 வயதுக்குட்ட மாணவர்களுக்கான மும்முறை தாண்டுதலில், முகமது இர்பான், ஹரிஹரன், ஐஸ்வரன் ஆகியோரும், நீளம் தாண்டுதலில் கிஷோர், முகமது பராஹ், பாசில் ரகுமான் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வட்டு எறிதலில், முகமது சாஹித், யூசப், சசிக்குமார் ஆகியோரும், நீளம் தாண்டுதலில்(17 வயதுக்குட்பட்ட) ஜீவன், கவின், சூரியா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை தட்டி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை