தெற்கு குறுமைய போட்டியில் கம்பு சுற்றி அசத்திய மாணவியர்
கோவை; தெற்கு குறுமைய அளவிலான சிலம்பம் போட்டி, குனியமுத்துார் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில், 37 பள்ளிகளை சேர்ந்த, 150 மாணவர்கள் கலந்துகொண்டனர். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவுகளில் செஸ், சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டன. சிலம்பம் போட்டியில் மட்டும், 50க்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த 18 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.