உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோ–கோ போட்டியில் கலக்கும் மாணவர்கள்

கோ–கோ போட்டியில் கலக்கும் மாணவர்கள்

கோவை: மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ–கோ போட்டிகள் கற்பகம் பல்கலையில் நேற்று (அக்.,21) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில், விருதுநகர் அணி 14–12 என்ற புள்ளிகளில் சேலம் அணியையும், திருவள்ளூர் 18–7 புள்ளிகளில் நீலகிரி அணியையும் வென்றன. இன்று (அக்.,22) கரூர் அணி 17–16 புள்ளிகளில் திண்டுக்கல் அணியையும், கோவை அணி 11–10 புள்ளிகளில் தஞ்சாவூர் அணியையும், ஈரோடு அணி 12–3 புள்ளிகளில் பெரம்பலுார் அணியையும், தருமபுரி அணி 11–9 புள்ளிகளில் திருவாரூர் அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ