பெற்றோரின் நம்பிக்கையை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும்
மேட்டுப்பாளையம்; அடுத்தவர்களுக்காக படிக்காமல் உங்களுக்காக, படிக்க வேண்டும். பெற்றோர்களின் நம்பிக்கையை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும், என பேராசிரியை சாந்தாமணி பேசினார்.மேட்டுப்பாளையத்தில் உள்ள நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது. இந்த விழாவுக்கு கல்லூரி இணை நிர்வாக அறங்காவலர் ஞானசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி பேராசிரியை சாந்தாமணி பேசியதாவது: ஒவ்வொரு மாணவ, மாணவியரிடம் உள்ள தனித்திறமையை, வெளிக் கொண்டு வருவது ஆசிரியர்களாகும். அதை செயல் வடிவம் ஆக்கி சிறந்த மாணவர்களாக முன்னேற்றம் அடைய வேண்டும்.அடுத்தவர்களுக்காக படிக்காமல், உங்களுக்காக படிக்க வேண்டும். பெற்றோர்களின் நம்பிக்கையை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பேராசிரியை பேசினார்.பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஆண்டு தேர்வில், இக்கல்லூரியில் ஆட்டோமொபைல் பிரிவில் படிக்கும் மாணவன் ஹரிஹரன், 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றார்.இந்த மாணவரையும், ஒவ்வொரு பாடப்பிரிவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற, மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டி கேடயம் வழங்கினர்.விழாவில் முன்னாள் டி.எஸ்.பி., வெள்ளியங்கிரி, கல்லூரி முதல்வர் கவுசல்யா, நிர்வாக அதிகாரி பாஸ்கரன், செயலர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பேசினர். முதலாம் ஆண்டு பேராசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.