மேலும் செய்திகள்
கைத்தறி ஆடை அணிவகுப்பு; பிரமிக்க வைத்த மாணவியர்
06-Aug-2025
கோவை; நவக்கரை, ஏ.ஜே.கே.கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறையின் சார்பில், தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. செயலாளர் அஜீத் குமார் லால் மோகன் விழாவிற்கு தலைமை வகித்தார். இந்திய பாரம்பரியத்தை பறைச்சாற்றும் கைத்தறி ஆடையை ஆசிரியர்கள், மாணவர்கள் அணிந்து வந்திருந்தனர். கைத்தறி கண்காட்சி, விற்பனை மற்றும் மாணவர்களின் அலங்கார அணிவகுப்பு நடந்தது. மாணவர்கள் கைத்தறியால் நெய்யப்பட்ட விதவிதமான ஆடைகளை அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்தது, காண்போரை கவர்ந்தது. நிகழ்வின் ஒரு பகுதியாக சுயசார்பு இந்தியாவின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
06-Aug-2025