கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தேசிய அளவிலான காரத்தே போட்டிக்கான மாணவர்கள் தேர்வு நடைபெற்றது. இன்டர்நேஷனல் சின்டோகான் காரத்தே பள்ளியின் சார்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி வரும், 17ம் தேதி பொள்ளாச்சியில் நடக்கிறது. இதற்கான தேர்வு மற்றும் கராத்தே பெல்ட் தேர்வு, ஆனைமலை கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அன்னை மழலையர் பள்ளியில் நடந்தது. இன்டர்நேஷனல் சின்டோகான் கராத்தே பள்ளி இந்திய தலைமை பயிற்சி ஆசிரியர் பஞ்சலிங்கம், ஆசிரியர் வீரமுத்து ஆகியோர் பயிற்சி அளித்து தேர்வு செய்தனர்.தேர்வு பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தாளாளர் சிவக்குமார், செயலாளர் அகிலா, தலைமையாசிரியர் கனகராஜ் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.