உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை; ஆசிரியர்கள் தீவிரம்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை; ஆசிரியர்கள் தீவிரம்

உடுமலை: பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளதால், மாணவர்களுக்கு உளவியல் ரீதியான தன்னம்பிக்கை அளிப்பதில், ஆசிரியர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், 18 மையங்களில், 3,911 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.கடந்தாண்டில், மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்ட தேர்ச்சி சதவீதம் முன்னிலையில் இருந்தது. நடப்பாண்டிலும் அதற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.இதனால், அரை இறுதி தேர்விலிருந்தே கல்வித்துறை அலுவலர்கள் அரசு பள்ளிகளில் தொடர் ஆய்வு நடத்தியதுடன், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கும் அறிவுறுத்தினர்.அதற்கேற்ப பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தியும் மாணவர்களை தேர்வு வரை ஆசிரியர்கள் தயார்படுத்தினர். தற்போது தேர்வு நிறைவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட உள்ளது.இந்நிலையில், உடுமலை சுற்றுப்பகுதியில் தேர்வு முடிவுகளால், மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்து விடக்கூடாதென, ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் நுாறு சதவீதம் பயிற்சி அளித்திருந்தாலும், தேர்வின் போதும், தேர்வு முடிவுகள் வெளியிடும் போதும் பதட்டத்தில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு உளவியல் ரீதியான நம்பிக்கையும், அந்த நேரங்களில் ஆசிரியர்கள் அளிக்க வேண்டும்.அந்த வகையில் தேர்வின் போது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களை அனுப்பினோம். ஆனால் முடிவுகள் வெளியிடும் போதும், ஆசிரியர்களின் நம்பிக்கை மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.அதனால் மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியும் தன்னம்பிக்கை அளித்தும் வருகிறோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ