மேலும் செய்திகள்
பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
14-Apr-2025
வால்பாறை; வால்பாறை மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா, என, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வால்பாறையில் காடம்பாறை, வெள்ளிமுடி, கருமுட்டி, கீழ்பூனாஞ்சி, சங்கரன்குடி, கவர்க்கல், கல்லார், பரமன்கடவு, பாலகணாறு, சின்கோனா உள்ளிட்ட, 12 செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் செட்டில்மென்ட் பகுதியில், தாசில்தார் மோகன்பாபு தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சிசுந்தரம், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.அதிகாரிகள் கூறியதாவது: பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசின் சார்பில் செய்து தரப்படுகிறது. இருப்பினும் குடிநீர், தெருவிளக்கு, அரசு வழங்கும் உதவித்தொகை, மருத்துவ வசதி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை உள்ளதா என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.பழங்குடியின மக்களின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். விவசாயம் செய்ய போதிய வசதிகள் வனத்துறை வாயிலாக செய்துதரப்படும். கான்கிரீட் வீடுகளாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.
14-Apr-2025