துணை சுகாதார நிலையங்கள் மூன்று இடங்களில் திறப்பு
வால்பாறை; வால்பாறையில் ஒரே நாளில் மூன்று இடங்களில் நகர்புற துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன.தமிழகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் நகர்புற துணை சுகாதார மையங்களை திறந்து வைத்தார்.அதன் அடிப்படையில், 'டான்டீ' தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நகர்புற துணை சுகாதார நிலையம் துவக்க விழா, வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமையில் நடந்தது.'டான்டீ' துணை சுகாதார நிலைய டாக்டர் ஷில்பா வரவேற்றார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி குத்துவிளக்கேற்றி, மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.இதே போல், முடீஸ், சோலையாறுநகர் ஆகிய இடங்களிலும் நகர்புற துணை சுகாதார நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. விழாவில், சோலையார்நகர் துணை சுகாதார நிலைய டாக்டர் சூர்யகுமார், கவுன்சிலர் இந்துமதி, செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொாண்டனர்.