உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்ணம்பாளையத்தில் துணை சுகாதார நிலையம்

கண்ணம்பாளையத்தில் துணை சுகாதார நிலையம்

சூலுார்; கண்ணம்பாளையத்தில், புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சான்ட்பிட் நிறுவனத்தின் பங்களிப்பில், 45 லட்சம் ரூபாய் செலவில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. நிறுவன உரிமையாளர் வரதராஜ், துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், பேரூராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட வாகனங்கள் இயக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளை, தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் புஷ்பலதா, செயல் அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !