உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரபி பருவ விதைப்புக்கு மானிய விலையில் விதை

 ரபி பருவ விதைப்புக்கு மானிய விலையில் விதை

ஆனைமலை: ஆனைமலை வேளாண் விரிவாக்க மையத்தில் ரபி பருவ விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விதைகள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. உயர் விளைச்சல் தரக்கூடிய சான்று விதைகள் கோ-55 சன்ன ரக நெல் -- 7 டன், பாரம்பரிய வெள்ளை நிற ரகங்களான துாயமல்லி -- 150 கிலோ, சீவன்சம்பா -- 500 கிலோ, கோவில்பட்டி 12 ரக சோளம் - 1,400 கிலோ, சி.எஸ்.வி 41 சிறுதளை சோளம்- - 60 கிலோ, ராகி - 60 கிலோ, 'வம்பன் 8' உளுந்து -- 60 கிலோ, தட்டைபயறு டிசி ரகம் -- 800 கிலோ, கொள்ளு பையூர் - 2,800 கிலோ உள்ளது. வரப்பு பயிராக பயிரிட ஏற்ற கோ-8 ரக துவரை 20 கிலோ, வி.ஆர்.ஐ. - 4 ரக எள் 150 கிலோ மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா,பொட்டாஷ் பாக்டீரியா 200 லிட்டர், நுண்ணுாட்டச்சத்து - 6 டன் உள்ளது. பயிர்களை வேர்ப்பூஞ்சாண நோயிலிருந்து காப்பாற்றும் டிரைகோடர்மா விரிடி, சூடோமோனஸ் 400 கிலோ, மண்புழு வளர்ப்பு சில்பாலின் படுக்கை 70 எண்கள், துத்தநாக சல்பேட் நுண்ணுாட்டம் 5 டன் அனைத்தும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்தகவலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ