உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஓடும் காரில் திடீர் தீ  

 ஓடும் காரில் திடீர் தீ  

கோவை:கணபதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவெங்கடபதி. இவரது காரை நீலாம்பூரை சேர்ந்த சன்ஜித் என்பவர் அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் ஓட்டிச்சென்ற போது, காரின் முன்பகுதியில் புகை வெளியேறியது. டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தி இறங்கினார். சற்று நேரத்தில், கார் முழுவதும் தீ பரவியது. தகவல் அறிந்த பீளமேடு தீயணைப்பு வீரர்கள் ஏழு பேர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கார் முழுமையாக சேதமடைந்தது. பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை