கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
வால்பாறை; ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி, கடந்த 11ம் தேதி துவங்கியது. தேசிய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி, ஆனைமலை புலிகள் காப்பத்தில் நடந்தது.வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலும், மானம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலும், இரு வனச்சரகத்திலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், தலா எட்டு 'பீட்'களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து, 9 நாட்கள் நடந்த பணியின் போது, யானை, காட்டுமாடு, கரடி, சிங்கவால்குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகளை நேரடியாக பார்வையிட்டு பதிவு செய்ய்ப்பட்டது.கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட புள்ளி விபரங்கள் தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.