மேலும் செய்திகள்
மானிய விலையில் நாற்றுகள் விற்பனை..
06-Feb-2025
சூலுார்;செஞ்சேரிப்புத்தூரில் மானிய விலையில் பழச்செடிகள் தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், செஞ்சேரிபுத்தூரில் பழச்செடிகள் தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. 200 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சப்போட்டா, கொய்யா, நெல்லி, பப்பாளி, சீதா என, ஐந்து வகையான பழச்செடிகளின் தொகுப்பு, 200 ரூபாய் ஆகும். இதில், 75 சதவீதம் மானியம் போக, 50 ரூபாய்க்கு மக்களுக்கு தொகுப்புகளை, தோட்டக்கலை உதவி அலுவலர் சாய் கண்ணன் வழங்கினார். ஆதார் நகல், ஒரு போட்டோவை அளித்து பழச்செடிகள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம், என, அலுவலர்கள்கூறினர்.
06-Feb-2025