என்.டி.ஏ. கூட்டணிக்கு ஆதரவு
போத்தனூர்: மதுரையில் நேற்று முன் தினம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ.) மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை, தமிழ்நாடு, பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சியின் (கூட்டமைப்பு) தேசிய பொது செயலாளர் சிவசண்முகசுந்தர பாபு சுவாமி சந்தித்தார். அவர் கூறுகையில், என்.டி.ஏ. கூட்டணிக்கு எங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தேன். எங்கள் சமுதாய மக்களுக்கான தேவைகள் குறித்து மனு அளித்தேன், என்றார்.