உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 8 இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு

8 இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு

வால்பாறை; வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட வேவர்லி எஸ்டேட் பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத்அலி - ரோகமாலா தம்பதியரின் மகன் நுார்சல்ஹக், 8, பால் வாங்க சென்ற போது, வனவிலங்கு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனை கடித்து கொன்றது சிறுத்தையா அல்லது கரடியா என்பதை கண்டறியும் வகையில், வனத்துறை சார்பில் நேற்று சம்பவம் நடந்த பகுதியில் எட்டு இடத்தில் கேமரா பொருத்தி கண்காணிக்கின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'வேவர்லி எஸ்டேட்டில் சிறுவனை கடித்து கொன்றது சிறுத்தையா, கரடியா என்பதை கண்டறியும் வகையில், முதல் கட்டமாக கேமரா பொருத்தி கண்காணிக்கிறோம். வனவிலங்கு நடமாட்டம் உறுதியானதும், கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வேவர்லி எஸ்டேட் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுமதிக்கூடாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை