உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குற்ற செயல்களை தடுக்கும் கண்காணிப்பு கேமராக்கள்

குற்ற செயல்களை தடுக்கும் கண்காணிப்பு கேமராக்கள்

கருமத்தம்பட்டி: 'கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடத்தில் குற்ற செயல்கள் தடுக்கப்படுகின்றன,'' என, எஸ்.பி., கார்த்திகேயன் பேசினார். கணியூர் ஊராட்சியில், 24 இடங்களில், 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் கட்டுப்பாட்டு அறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிறுவப்பட்டது. இதன் துவக்க விழாவுக்கு, ஊராட்சி தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் கட்டுப்பாட்டு அறையை துவக்கி வைத்து பேசுகையில்,'' குற்ற செயல்களில் ஈடுபடுவோர், கண்காணிப்பு கேமராக்களை கண்டதும் அச்சம் அடைந்து அங்கிருந்து சென்று விடுகின்றனர். அதையும் மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். கேமராக்கள் இருக்கும் இடத்தில் குற்ற செயல்கள் தடுக்கப்படுகின்றன. கணியூர் ஊராட்சியில் நவீன தொழில்நுட்பத்தில் புதிய கோணத்தில் சிந்தித்து, 70 கேமராக்களை பொருத்தியுள்ளது பாராட்டுக்குரியது, என்றார். டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் துணைத்தலைவர் ராஜூ, வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர் ஜெகதீசன், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ