மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யும் பணி
மேட்டுப்பாளையம்--அவிநாசி சாலை விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. அவிநாசிக்கு முன் உள்ள ஆட்டையாம்பாளையத்தில் துவங்கி, மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் வரை 35 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய 255 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. அகற்ற வேண்டிய மரங்கள் மற்றும் மாற்றி நிறுவ வேண்டிய மின் கம்பங்கள் சாலையின் மையப்பகுதியில் இருந்து அவற்றின் துாரம் ஆகியவை நேற்று அளவீடு செய்யப்பட்டன.இதற்காக அன்னுார் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நாகமாபுதுாரில் சாலையின் மையத்தின் இருபுறமும் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், அவற்றின் துாரம் ஆகியவற்றை அளவிடும் செய்யும் பணி நேற்று நடந்தது. உதவி பொறியாளர், சாலை ஆய்வாளர் மற்றும் சாலை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெண்டர் இறுதிச் செய்யப்பட்டவுடன் பணி துவங்கும். சிறு பாலங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடங்களிலும் அளவீடு செய்யப்பட உள்ளது,'' என்றனர்.