உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி நட்சத்திர பூஜையும், மகா திருமஞ்சனமும் நடந்தது. காரமடை அடுத்த சென்னிவீரம்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காலை, 7:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தை மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி