உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

அன்னுார்; அன்னுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த குமரி ஆனந்தன், கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராக பணிபுரிந்து வந்த யமுனா, அன்னுார் தாலுகா தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றார். புதிய தாசில்தார் யமுனாவுக்கு, துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை