உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தமிழ் மொழி திறனறித்தேர்வு மாவட்ட தரவரிசை வெளியீடு

 தமிழ் மொழி திறனறித்தேர்வு மாவட்ட தரவரிசை வெளியீடு

கோவை: 2025-2026 கல்வியாண்டுக்கான, 'தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு'தரவரிசை பட்டியலை,தமிழக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் மொழிஇலக்கியத்தில், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், இத்திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் பிளஸ் 1 படிக்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உட்பட) பள்ளிகளிலிருந்து, 2,57,761 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை, பள்ளிக்கல்வி வழியாக வழங்கப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 50 சதவீதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்; மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள். முன்னதாக, மாணவர்களின் மதிப்பெண் விவரங்களில் திருத்தங்கள் கோரப்பட்டு, அந்த செயல்முறைகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மாவட்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சேலம், கரூர், தருமபுரி, நாமக்கல் மற்றும் ஈரோடு அகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. 52 மாணவர்கள் தேர்ச்சியுடன் மாநில அளவில், கோவை 8வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை 23வது இடத்தில் உள்ளது. கடைசி ஐந்து இடங்களில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ