உள்ளூர் செய்திகள்

தமிழ்ச் சங்க விழா

கோவில்பாளையம்; கவையன்புத்தூர் தமிழ்ச் சங்க விழா, கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் கணேசன் வரவேற்றார். அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மீனாட்சி தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. அவற்றை உறுதியோடு எதிர் கொண்டு, வெற்றி பெற வேண்டும் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே, என்றார்.டாக்டர் முத்துசாமி பேசுகையில், தமிழ் கல்வி பற்றிய புரிதல் இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. அன்னை தமிழில் படித்து அறிவைப் பெருக்க வேண்டும், என்றார்.உதவி பேராசிரியர் முகமது ஆரிபுதீன் 'துன்பம் உறவறினும் செய்க,' என்னும் தலைப்பில் பேசுகையில், எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் செயலை செய்து முடிப்பவன் மாமனிதன். மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது ஒரு கலை. உறுதியும் தன்னம்பிக்கையும் உள்ள மனிதர்களால் மட்டுமே அது முடியும்,' என்றார். தூய தமிழில் பேசிய நான்கு மாணவர்களுக்கு சான்றிதழும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை