உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

கோவில்பாளையம்; கவையன்புத்தூர், தமிழ்ச்சங்க முப்பெரும் விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. கோவில்பாளையம்,விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில், வரும் 8ம் தேதி காலை 9:30 மணிக்கு, கவையன்புத்தூர், தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை சோதி மைய அறக்கட்டளை இணைந்து முப்பெரும் விழா நடத்துகின்றன. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு) தேன்மொழி தலைமை வகிக்கிறார். நூறாண்டு நிரம்பிய பாரதி சிந்தனையாளர் பணி மைய நிறுவனர் கோபி, இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஹரிதா ஆகியோர் கவுரவிக்கப்படுகின்றனர்.கவுமார மடாலயத்தின் பவதாரணி, 'வினையான், வினையாக்கி கோடல்' என்னும் தலைப்பில் பேசுகிறார். பெரிய புராணத்தில், நாயன்மார்களை நினைவு கூர்ந்து (பணி நிறைவு) பேராசிரியர் வேலுச்சாமி தலைமையில் பேச்சரங்கம் நடக்கிறது.10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி