உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.140 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு; மாவட்ட கலெக்டர் தகவல் 

ரூ.140 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு; மாவட்ட கலெக்டர் தகவல் 

பொள்ளாச்சி; ''நடப்பாண்டு, 140 கோடி ரூபாய்க்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். பொள்ளாச்சி கோட்ட மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. சப்-கலெக்டர் (பொ) விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பேசியதாவது: மாணவர்கள் கல்வி பயில, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்பதற்காக கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதற்கன முகாம் அந்தந்த பகுதிகளில் நடத்தப்படுகின்றன. கடந்தாண்டு, நான்காயிரம் மாணவர்களுக்கு, 130 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. நடப்பாண்டு, ஆறாயிரம் மாணவர்களுக்கு, 140 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர்க்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. கல்வி கடன் பெறுவது எளிமையானது என்பது குறித்து விளக்கும் வகையில், இதுபோன்று முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு, பேசினார். வங்கி அதிகாரிகள், கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர். முகாமில், 29 பேருக்கு, 2.15 கோடி ரூபாய்க்கான கடன் உதவி வழங்க ஆணைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ