மானியத்தில் தார்ப்பாய்
உடுமலை: உடுமலை, சாளையூர் துணை வேளாண் விரிவாக்க மையத்தில், 20 அடி நீளம், 15 அடி அகலமுள்ள தார்ப்பாய் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுப்பகுதி கிராம விவசாயிகள், மானிய திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என, வேளாண் உதவி அலுவலர் மார்க்கண்டன் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, 98949 36328 என்ற மொபைல்போன் எண்ணில் வேளாண் உதவி அலுவலரை அணுகலாம். விளைபொருட்களை காய வைக்க, இந்த தார்ப்பாய் பயனுள்ளதாக இருக்கும். குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்திலும், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தார்ப்பாய் பெறலாம் என, வேளாண்துறையினர் அறிவித்துள்ளனர்.