உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக்  ஊழியர்கள் மாநாடு பணி நிரந்தரம் கோரி தீர்மானம்

டாஸ்மாக்  ஊழியர்கள் மாநாடு பணி நிரந்தரம் கோரி தீர்மானம்

கோவை : கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் 8-வது மாநாடு, கோவை கணபதி பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு., இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.சி.ஐ.டி.யு., டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். டாஸ்மாக் ஊழியர் மாநிலச் சம்மேளனம் பொதுச்செயலாளர் திருச்செல்வன் சிறப்புரையாற்றினார்.மாநாட்டில், தமிழக அரசு 23 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் புதிய பில்லிங் நடைமுறையை அவசரமாக நிறைவேற்றக்கூடாது. டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட துணை தலைவர் சரவணன், சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !