மேலும் செய்திகள்
தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வலியுறுத்தல்
03-May-2025
கோவை; ஓட்டல்கள் மட்டுமின்றி அங்கன்வாடி, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என்று, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா கூறினார்.உணவு மற்றும் உணவு சார்ந்த துறையில் உள்ள, அனைவரும் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு பெற்று இருக்கவேண்டியது கட்டாயம். ஆனால், ஓட்டல்கள், பேக்கரிகள், தவிர பிற உணவு சார்ந்த துறைகள் இதில் கவனம் செலுத்துவதில்லை. இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா கூறியதாவது: உணவு தயாரிப்பு, விற்பனை, வினியோகம் எங்கு நடந்தாலும் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு கட்டாயம் இருக்க வேண்டும். உதாரணமாக, அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் என அனைவருக்கும் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இருக்க வேண்டும். அதை ஆய்வின் வாயிலாக உறுதி செய்யவுள்ளோம்.தவிர ஜூன் மாதம் பள்ளி, கல்லுாரிகள் திறந்தவுடன் பள்ளி, கல்லுாரி கேன்டீன்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும். கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
03-May-2025