மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கியதில் இரு தொழிலாளர்கள் காயம்
08-Oct-2024
வால்பாறை : எஸ்டேட்களில் விடுமுறை நாளில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தினக்கூலியாக, 454.03 ரூபாய் வழங்கப்படுகிறது.தொழிலாளர் பற்றாக்குறையால் எஸ்டேட் நிர்வாகங்கள் திணறி வரும் நிலையில், பல்வேறு எஸ்டேட்களில் காலை, மாலை நேரங்களில் இன்சென்டீவ் முறையில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:வால்பாறையில் பல்வேறு காரணங்களால், தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறும் நிலையில், தற்போது மிக குறைவான தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொழிலாளர் பற்றாக்குறை உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் கூட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் விடுமுறை நாளில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு, எஸ்டேட் நிர்வாகங்கள் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
08-Oct-2024