உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொலைதுார மையங்களில் பணி ஒதுக்கீடு கல்வி அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் முறையீடு

தொலைதுார மையங்களில் பணி ஒதுக்கீடு கல்வி அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் முறையீடு

கோவை: பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தாங்கள்விரும்பும் மையத்தில் வாய்ப்பு வழங்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முறையிட்டு வருகின்றனர். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், போராட்டத்தில் இறங்குவது குறித்து கலந்தாலோசித்து வருகின்றனர்தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த, 28ம் தேதி துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது.இந்நிலையில், பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும், 4ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று மையங்களில் துவங்குகிறது.இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் மையத்தில் வாய்ப்பு வழங்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கடந்த, 24ம் தேதி தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், கோரிக்கை மனு அளித்தனர்.ஆனால், கோவை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கோவையிலும், பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரை,நேற்று மாலை சந்தித்து முறையிட்டனர்.தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கூறுகையில், 'கோவை வருவாய் மாவட்ட முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரும்பும் விடைத்தாள் திருத்தும் மையம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே, போராட்டங்களில் இறங்குவது குறித்து பேசி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை