உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை களமிறங்க ஆசிரியர்கள் அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை களமிறங்க ஆசிரியர்கள் அறிவுறுத்தல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களே களம் இறங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2024--25ம் கல்வியாண்டில், 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், அரசு பள்ளிகளில் செயல்படுத்தும் திட்டங்களை விவரிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, ஆசிரியர்களே நேரடியாக களம் இறங்கி பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் சென்று, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்துவர்.உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், நடுநிலை பள்ளிக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் சென்று, 8ம் வகுப்பு முடித்த மாணவர்களிடம், அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர ஆலோசனை அளிப்பர்.குறிப்பாக, அரசு பள்ளிகளில் தமிழ் அல்லது ஆங்கில வழிக்கல்வியில், 6 முதல் பிளஸ் 2 வரை, தொடர்ச்சியாக படித்தால் மட்டுமே தொழிற்கல்வியில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை