உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

ஆனைமலை: ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா, அரசூரில் நடந்தது.ஆராய்ச்சி நிலையை தலைவர் இணை பேராசிரியர் சுதாலட்சுமி தலைமை வகித்து, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.தென்னையில் உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் உர மேலாண்மை என்ற தலைப்பில், உழவியல் பேராசிரியர் தவபிரகாஷ் பேசினார். தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து பயிர் நோயியல் இணை பேராசிரியர் லதா பேசினார்.விழாவில் பங்கு பெற்ற பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், மண்புழு உரம், பேசில்லஸ், டிரைக்கோடெர்மா, தென்னை டானிக் போன்ற இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பயிர் நோயியல் பேராசிரியர் மீனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை