உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்சயா கல்லுாரியில் தொழில்நுட்ப தினவிழா

அக்சயா கல்லுாரியில் தொழில்நுட்ப தினவிழா

கோவை; கிணத்துக்கடவில் அமைந்துள்ள அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், தொழில்நுட்ப தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிராஜக்ட் போட்டிகள் நடந்தது.வெப் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் கோகுல், நெடுநாள் யானை அப்ஸ்கேல் சொல்யூசன்ஸ் சி.இ.ஒ., நல்லதம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர் குழுக்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.பார்வையற்றோருக்கு பொருள்களை உணர உதவும் தொழில்நுட்பங்கள், போர்வெல்களிலிருந்து குழந்தைகளை மீட்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை முன்வைத்து மாணவர்கள் தங்கள் திட்டங்களை காட்சிப்படுத்தினர். மொத்தம், 247 திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.அனைத்துத் துறை வாரியாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி ஆலோசகர் ஜோசப் சேவியர், தலைமை நிர்வாக அதிகாரி கபிலன், முதல்வர் ரவீந்திரன், துணை முதல்வர் சிவசங்கரி, அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை