உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் தொழில் நுட்பம்: நாஸ்காம் தலைவர் பேச்சு

விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் தொழில் நுட்பம்: நாஸ்காம் தலைவர் பேச்சு

கோவை;''அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வலிமையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவானதாக உள்ளது,'' என, நாஸ்காம் (தேசிய சாப்ட்வேர், சாப்ட்வேர் சேவை நிறுவனங்களின் சங்கம்) தலைவர் ராஜேஷ் நம்பியார் பேசினார்.சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரியின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்தார். முதல்வர் குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'நாஸ்காம்' தலைவர் ராஜேஷ் நம்பியார் பேசியதாவது:இந்திய பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. ஜெர்மனியையும், ஜப்பானையும் பின்னுக்கு தள்ளி உலகின் 3வது பொருளாதார வலிமைமிக்க நாடாக உருவாகியுள்ளது. இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது.இந்தியாவின் விவசாயம், வின்வெளி, கட்டுமானம், நிதி என, அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப மேம்பாடு, விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக உள்ளது. தனியார், அரசு துறைகளில் தொழில்நுட்ப பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்தியாவில் உள்ள பெண்கள், 83 சதவீதம் பேருக்கு வங்கி கணக்குகள் உள்ளன. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் பயனுள்ளதாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு கணக்கீட்டு தொழில்நுட்பம், வங்கித்துறையில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.மாலையில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு, தென்னிந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் கமல் பாலி தலைமை வகித்தார். 2,900 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ