எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் டெக்ஸ்பீரியா-25 விழா
கோவை: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியில், 'டெக்ஸ்பீரியா-25' எனும் கல்லுாரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப போட்டிகள் நடந்தன.'ஜே- இம்பாக்ட் கிரியேட்டிவ் லேர்னிங் கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் ஐ.டி., தலைவர் மற்றும் ஏ.ஐ., ஆலோசகர் அருண் திவாகரன் பங்கேற்று பொறியியல் துறை மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் எதிர்காலம், தொழில்நுட்ப ரீதியான ஸ்டார்ட் அப், தகவமைப்பு நெறிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.இதில், தொழில்நுட்ப கட்டுரை விளக்கம், கோடிங் போட்டிகள், ரோபோடிக்ஸ் சவால்கள், ஹேக்கத்தான் மற்றும் தொழில்நுட்ப படைப்பு கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் நிலையான பொறியியல் தீர்வுகள் போன்ற துறைகளில், படைப்புகளாகவும் காட்சிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், முதல்வர் செந்துார்பாண்டியன், துணை முதல்வர்கள் தமிழ்செல்வம், விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.