மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
06-Apr-2025
ராஜபாளையம் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் வீரபாண்டி, 22. கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம், வீரபாண்டி சுண்டபாளையம் ரோடு பூசாரிபாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரபாண்டி, சம்பவ இடத்திலேயே பலியானார். கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
06-Apr-2025