மேலும் செய்திகள்
நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு 'சிறை'
06-Apr-2025
கோவை : கொலை முயற்சி வழக்கில், வாலிபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் நாகராஜ்; பனியன் கம்பெனி தொழிலாளியான இவர், கடந்த 2022, ஜன., 20ல், ஒண்டிப்புதுார் மேம்பாலத்தின் கீழ் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்த சென்றார்.அப்போது, அதே பகுதியிலுள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்தகிருஷ்ணகுமார்,40 என்பவரும், நாகராஜூம் சேர்ந்து, மது வாங்கி பங்கிட்டு குடித்துள்ளனர்.கிருஷ்ணகுமார் அதிகமாக மது குடித்து விட்டதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணகுமார் ஆத்திரமடைந்து, நாகராஜை பாட்டிலால் குத்தினார்.படுகாயமடைந்த நாகராஜ், சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.அவர் மீது, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி தமயந்தி, குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணகுமாருக்கு, மூன்றாண்டு சிறை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.
06-Apr-2025