மேலும் செய்திகள்
சென்னை ஐ.டி., ஊழியரிடம் பணம் பறித்த 4 பேர் கைது
04-Mar-2025
கோவை; கிரைண்டர் 'டேட்டிங்' ஆப் வாயிலாக பழகிய, நபரை சந்திக்க சென்ற வாலிபரிடம் மொபைல், பைக் பறித்து சென்ற நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த 29 வயது வாலிபர், சரவணம்பட்டியில் ஒரு மேன்ஷனில் தங்கிருந்து சிங்காநல்லுார் பகுதியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும், 'கிரைண்டர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகமான நபர் ஒருவர், அவரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார். காளப்பட்டி ரோடு, மகா நகரில் உள்ள, ஒரு காலி இடத்துக்கு வரும்படி கூறினார். வாலிபர் கடந்த 25ம் தேதி நள்ளிரவு, அங்கு சென்றார். அப்போது அங்கு காத்திருந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி, வாலிபரின் மொபைலை பறித்துள்ளனர். அவரின் 'ஜி.பே.,' பாஸ்வேர்டை கேட்டு மிரட்டினர். வாலிபர் தர மறுத்ததால், அவரை கத்தியால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு, அவரிடம் இருந்த மொபைல் மற்றும் பைக்கை பறித்து சென்றனர். காயமடைந்த வாலிபர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட வாலிபர், சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
04-Mar-2025