உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நன்னெறி கதைகள் கூறுவதால் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது

நன்னெறி கதைகள் கூறுவதால் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது

கோவை; கோவை பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நன்னெறி குணங்களை மேம்படுத்துவதற்காக, காலை பிரார்த்தனைக் கூட்டத்தின் போது மாணவர்கள் கட்டாயம் நன்னெறி கதைகள் கூற வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையின்படி, ஒவ்வொரு நாளும் காலை நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில், மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட அல்லது அறிந்த நன்னெறி கதைகளை, மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். பள்ளித் தலைமையாசிரியர் கூறுகையில், 'இந்த புதிய முயற்சி, மாணவர்களை கதைகள் படிப்பதற்கும், அதன் மூலம் ஒழுக்கம், நீதி, நேர்மை போன்ற நன்நெறிகளை கற்றுக்கொள்வதற்கும் ஊக்குவிக்கிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் கதைகளைப் பயின்று, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக, அவர்களிடையே தன்னம்பிக்கையும், சமூகப் பொறுப்புணர்வும் அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் இது, மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை