டென்னிஸ்: இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி சாம்பியன்
கோவை: அண்ணா பல்கலை, 10வது மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான ஆடவர் டென்னிஸ் போட்டி, இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. ஆறு அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த, முதல் அரையிறுதியில் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கற்பகம் இன்ஜினியரிங் கல்லுாரி அணியை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாம் அரையிறுதியில், இந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்று, சாம்பியன்ஷிப் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணய்யன், கல்லுாரி முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.