உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

சூலுார்: சுல்தான்பேட்டை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட, விவசாயிகள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுல்தான்பேட்டை அடுத்த பெரிய கம்மாளப்பட்டியை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், செஞ்சேரிமலையில் உள்ள உரக்கடையில் மருந்துகளை வாங்கி, தென்னை மரங்களுக்கு பயன்படுத்தியதாகவும், அதன் காரணமாக, 400 தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இரு நாட்களுக்கு முன், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும், நிவாரணம் வழங்க கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் போராட்டம், சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், மாவட்ட செயலாளர் வேலு மந்திராஜலம் தலைமையில், கணேசன், மோகன்ராஜ், லோகேஸ்வரி உள்ளிட்ட, 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள், யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டக்கலைந்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். போலீசார், யூனியன் அலுவலக கேட்டை பூட்டி, பாதுகாப்பாக நின்றனர். இதையடுத்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோட்டக்கலை மற்றும் வேளாண் அதிகாரிகள் மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை