மேலும் செய்திகள்
புதுமாப்பிள்ளை தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
26-Sep-2025
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், குழல்மன்னம் குத்தனுார் பகுதியைசேர்ந்த சஞ்சய் பிஸ்வாள் -- சங்கீதா தம்பதியரின் மகள் பிரியங்கா 15, பாலக்காடு அரசு மோயன் மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், பிற்பகல் 3:00 மணியளவில் படுக்கை அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உறவினர்கள் கண்டனர். தகவல் அறிந்து குழல்மன்னம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேல் நடவடிக்கை எடுத்தனர். மாணவியின் உடலை, நேற்று மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தோழிகளுடன் போனில் அதிகமாக பேசியதால், உறவினர்கள் பிரியங்காவை திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்து மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
26-Sep-2025