உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாரம் இருதினங்கள் பரிசோதனை

வாரம் இருதினங்கள் பரிசோதனை

கோவை; புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை திட்டத்தின் கீழ், கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு வருபவர்களின் நலன் கருதி, பரிசோதனை செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், 3 வகையான புற்றுநோய்களுக்கு ஒருங்கிணைந்த பரிசோதனை திட்டம், கோவை உட்பட, 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், தேவையற்ற அலைச்சல், நேர விரயம் தவிர்க்கும் வகையில், ஒரே இடத்தில் மூன்று வகை பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.இது குறித்த, புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் புற்றுநோய் பிரிவு டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:அரசு மருத்துவமனைக்கு வரும் நபர்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய் புற்றுநோய்க்கு தனித்தனி பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.தற்போது, அவர்களின் நலன் கருதி மூன்று வகை புற்றுநோய் பரிசோதனையும் 63வது எண் அறையில் ஒருங்கிணைந்து கண்டறிதல் பரிசோதனை செய்கின்றோம்.ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் அன்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். புறநோயாளிகளுக்கான ஓ.பி., பதிவும் தேவையில்லை.நேரடியாக கூட்ட நெரிசல் ஏதும் இன்றி பரிசோதனை செய்துகொள்ளலாம். கடந்த பத்து நாட்களில், சுகாதாரநிலையங்களில், அறிகுறியுடன் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டவர்களில், 20 பேர் கண்டறிதல் பரிசோதனைக்கு வந்திருந்தனர். அதில், இருவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை உறுதி செய்து சிகிச்சை துவக்கியுள்ளோம்.தவிர, கோவையில் பைலட் திட்டமாக செயல்படுத்தப்பட்ட மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் முன்கூட்டி கண்டறிதல் திட்டத்தின் கீழும், பரிந்துரைக்கப்பட்டு வருபவர்களையும், இத்திட்டத்தின் ஆக., மாதம் முதல் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த பத்து நாட்களில், சுகாதாரநிலையங்களில், அறிகுறியுடன் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டவர்களில், 20 பேர் கண்டறிதல் பரிசோதனைக்கு வந்திருந்தனர். அதில், இருவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை உறுதி செய்து சிகிச்சை துவக்கியுள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !